Monday, 31 March 2008

போர்த்துகீசியரின் தாக்கம்



1591-ஆம் ஆண்டிலிருந்து 1658-ஆம் ஆண்டு வரை போர்த்துகீசியரின் செல்வாக்கு சோழ மண்டலத்துக் கடலோரப் பகுதியில் மேலோங்கி இருந்த காலம்.


பல்வேறு மேலைநாட்டு வணிகப் பொருட்கள் நாகை துறைமுகத்து வழியே தமிழகத்திற்கு இறக்குமதியானது. இக்கால கட்டத்தில் போர்த்துகீசிய மொழிச் சொற்கள் கணிசமான அளவில் நாகூர் வட்டார மொழியில் இரண்டறக் கலந்தன. உதாரணத்திற்கு சில வார்த்தைகள் :


அலமாரி (armaario), அன்னாசிப் பழம் (ananaas), ஆசுப்பத்திரி (hospital), கடுதாசி (carta), கோப்பை (copo), துவாலை (toalha), பீங்கான் (palangana), பீப்பா (pipa), பேனா (pena), பிஸ்கோத்து (biscoita), வராந்தா (varanda),


- அப்துல் கையூம்

0 comments:

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP