Sunday, 30 March 2008

இறைமாட்சி


மாட்சிமை பொருந்திய இறைவனின் சிறப்பினை யாவும் எடுத்து வைத்தல் இயலாத காரியம். மரங்கள் யாவையும் எழுதுகோலாக்கி, கடல் நீரை மையாக்கி, பூமியைத் தாளாக்கி எழுதினாலும் இறைவனின் பெருமையை எழுதிட முடியாது.

இறை நம்பிக்கையுடைய அத்தனைப் பேரும் பாராட்டக் கூடிய புலவர் ஆபிதீனின் வரிகளைப் பாருங்கள் :


இல்லா திருந்து எங்கும்
இயங்கா தியங்கி வாயால்
சொல்லா தமைந்து சொல்லிச்
செய்யா துவந்து செய்து
எல்லா முனைந்து ஆய்ந்து
எண்ணும் மனத்தை ஈந்த
வல்லா னுனை விளங்க
வன்மை எவர்க்கும் போதா !

தாங்காஓர் தூணு மின்றி
தரணிமுன் வான மைத்தாய்
ஓங்கலை கடல் படைத்தாய்
ஒருவித அணையு மில்லை
தூங்கிநற் பயனே தூவ
தந்தனை இரவை நித்தம்
பாங்கமை உனது சிறப்பு
பகருதல் எளிதே யாமோ?

- புலவர் ஆபிதீன்

5 comments:

Hameed.S.A.C 20 September 2008 at 12:53 pm  

What a command of Language, pulavar Abideen has been bestowed with. And.. look at the meaningful verses that establish the exaltedness of the omnipotent. I really feel bad that Poets like Abideen had not been brought to light despite his sheer talent and spell bound language

Hameed.S.A.C 20 September 2008 at 12:54 pm  

What a command of Language, pulavar Abideen has been bestowed with. And.. look at the meaningful verses that establish the exaltedness of the omnipotent. I really feel bad that Poets like Abideen had not been brought to light despite his sheer talent and spell bound language

அப்துல் கையூம் 5 December 2008 at 2:30 pm  

தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. புலவர் ஆபிதீனின் திறமை தமிழ்க் கூறும் நல்லுலகத்திற்கு பரவலாக அறியப்படாமலேயே போய் விட்டது நமது துரதிருஷ்டம்.

அப்துல் கையூம் (நாகூரி)

Dr. MaheNoor,  21 April 2021 at 9:34 am  

May Allah SWT bless our great grand father's soul....
May his writings enlighten our souls towards better understanding of this temporary life and prepare ourselves for the eternal abode...

Unknown 21 April 2021 at 9:41 am  

May Allah SWT bless our great grand father's soul...
May we learn through his works the blessings of this life & the importance of the eternal abode..

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP