Friday, 12 December 2008

துணுக்குச் செய்திகள்



நமது பண்டைய கட்டிடக்கலையின் பெருமையை உயர்த்திக் கூறுகையில் நம்மவர்கள் அவசியம் தஞ்சை பெரிய கோயிலின் மகத்துவத்தை குறிப்பிடாமல் இருக்க மாட்டார்கள். கோபுரத்தின் நிழல் கீழே விழாத வகையில் கட்டப்பட்டிருப்பதாக கதை விடுவார்கள்.

பெரியகோயில் கட்டப்பட்டவுடன், அதன் வானுயர்ந்த கோபுரத்தைப் பார்த்துப் பிரமித்த தஞ்சை மக்கள் கவலையுடன் 'கோபுரம் விழாமல் இருக்குமா?' என்று கேட்டதற்குத் தலைமை ஸ்தபதி தமாஷாக 'பயப்படாதீர்கள்! அதன் நிழல்கூடக் கீழே விழாது!' என்றாராம்.

அதை நிஜம் என்று இப்போதும் பலர் 'சீரியஸாக' நம்பிக் கொண்டிருப்பதுதான் இதில் வேடிக்கையான விஷயம்.

கோபுரத்தின் நிழல் தரையில் நன்றாகவே விழும்!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP