தமிழக முஸ்லீம்கள்
மலாய் நாட்டினுடைய வரலாற்றை முறையாக தொகுக்கப்பட்ட வரலாறு எது என்று பார்ககும் போது ‘செஜாரு மலாயு’ என்ற பெரிய நூல் நமக்கு கிடைக்கிறது. அதை எழுதியவர் அப்துல் காதர் என்ற ஆசிரியர் ஆவார். அவர் மலேசியா நாட்டின் பல்கலைக் கழக பேராசிரியர் , நாகப்பட்டினத்தைச் சார்ந்தவர். நாகப்பட்டினத்திலிருந்து மலேசியாவிற்கு வந்து குடியேறி மலாய் நாட்டு மக்களுடைய கலாச்சார முறையை தொகுத்து மலாய் நாட்டிற்கே முறையான ஒரு வரலாற்றை உண்டாக்கிக் கொடுத்த பெருமை ‘செஜாரா மலாயு’ எழுதிய அப்துல் காதர் அவர்களுக்கு உண்டு என்பது தமிழ் முஸ்லீம்களுக்கு பெருமை தரும் விஷயம்.
- சிராஜுல் மில்லத் ஜனாப் அப்துல் சமது சாஹிப் அவர்கள் பேங்காக் நகரில் தமிழ் முஸ்லீம் சங்கத்தில் ஆற்றிய உரையிலிருந்து